×

வடக்கு போலீஸ் நிலையத்தில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்கள்

திருப்பூர், டிச.19: திருப்பூர் மாநகரில் நடக்கும் விபத்து, வாகன சோதனை மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவை என, போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், போலீஸ் ஸ்டேஷன்களில் நிறுத்தப்படுகின்றன. கோர்ட்டில் வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு வரும் வரை, அவ்வாகனங்கள் போலீஸ் பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டும்.

வழக்கு முடிவு அடிப்படையில், வாகனங்கள் உரிமையாளரிடமோ அல்லது, போலீஸ் வசம் வைத்திருக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விபத்துகளில் சிக்கும் வாகனங்கள் பெரும்பாலும், வழக்கு முடிந்த பின்னரும், திரும்ப எடுத்துச் செல்லப்படுவதில்லை. அதை மீண்டும் பயன்படுத்த விரும்பாததாலும், உரிய ஆவணங்கள் இல்லாதது போன்ற காரணங்களால், ஸ்டேஷன் வளாகத்தில் கேட்பாரற்று கிடக்கின்றன.இதில் திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஏராளமான வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. நீண்ட நாளாக கிடக்கும் இவ்வாகனங்கள், வெயில், மழையால் வீணாகின்றன. இவ்வாகனங்களை ஏலம் விட, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Rusty ,Northern Police Station ,
× RELATED ஆவடி 40வது வார்டில் துருப்பிடித்து...