ராஷ்டிரிய ஜனதா செயற்குழு கூட்டம்

கோவை, டிச. 19: தமிழக ராஷ்டிரிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கோவை  கவுண்டம்பாளையத்தில் நடந்தது. மாநில தலைவர் எஸ்.எஸ்.மணியன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெலேந்திரன்,  பொருளாளர் பிரபாகர், மகளிர் அணி தலைவி தீபலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ‘’உள்ளாட்சி மன்ற தேர்தலில் அ.தி.மு.க/ கூட்டணி  கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பது,  அரசியல் பொதுச்சேவை செய்வோருக்கு இலவச டோல்கேட் பாஸ் வழங்க வேண்டும்.  விவசாயத்தில் புதிய  திட்டங்களை செயல்படுத்தி விவசாயத்தை உயர்ந்த நிலைக்கு எடுத்துச்செல்ல வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் மிக  முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்’’ என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில துணை செயலாளர்  ஜெய்கர்,  துணை தலைவர் தவமணி, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சாந்தி, பால   பாஸ்கரன், மூக்காண்டி, ஆர்.எச்.பி/ மாநில செயலாளர் டாக்டர் சரவணன், கோவை வடக்கு  மாவட்ட நிர்வாகிகள்  பெருமாள், சுரேஷ்குமார், அழகர்சாமி, கோமதி, கோபாலகிருஷ்ணன்  உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>