×

24ம்தேதி ஜனாதிபதி வருகையையொட்டி திருநள்ளாறில் புதுச்சேரி ஐஜி ஆய்வு

காரைக்கால், டிச. 19: வருகிற 24ம் தேதி ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் திருநள்ளாறு வருகையையொட்டி, புதுச்சேரி ஐ.ஜி சுரேந்தர்சிங்யாதவ் நேற்று திருநள்ளாற்றில் ஆய்வு நடத்தினார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 24ம்தேதி காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு பகுதியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற  தர்பாரண்யேஸ்வரர் மற்றும்  சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்யவுள்ளார்.ஜனாதிபதி வருகையையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட எஸ்எஸ்பி மகேஷ்குமார் பன்வால் உத்தரவின்பேரில் திருநள்ளாறு போலீசார், திருநள்ளாறு பகுதிக்குட்பட்ட தங்கும் விடுதிகள், நளன் குளம், புதிய ஹெலிபேட் பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று புதுச்சேரி ஐ.ஜி சுரேந்தர்சிங்யாதவ் திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவில், நளன் குளம், புதிய ஹெலிபேட் பகுதிகளில் தீவிர ஆய்வில் ஈடுபட்டார். அப்போது ஹெலிபேட் பகுதியில் சுற்றியுள்ள புதர்களை அப்புறப்படுத்தி போதுமான மின்விளக்குகளை அமைக்க போலீசாருக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன், ஜனாதிபதி வரும் போது, யார், யார் எங்கெங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும் என்பதை முன்கூட்டியே ஒத்திகை பார்த்து, மிகுந்த பாதுகாப்புடன் செயல்படவேண்டும். என அறிவுறுத்தினார்.கலெக்டர் விக்ராந்த்ராஜா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்குமார் பன்வால், புதுச்சேரியிலிருந்து கூடுதல் கமாண்டன்ட் வம்சிதரரெட்டி, பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு நித்தின் கோவல், ஸ்பெஷல்பிராஞ்சு போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags : Thirunallar ,Visit ,President ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...