×

ஆர்டிஓ பேச்சுவார்த்தையில் உடன்பாடு கொள்ளிடம் அருகே கொடக்காரமூலை கிராமத்தில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

கொள்ளிடம், டிச.19: கொள்ளிடம் அருகே கொடக்காரமூலை கிராமத்தில் குடிநீர் குழாய் புதைக்க தோண்டிய பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாயத்தை தவிர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொடக்காரமூலை கிராமம் ரெங்கசமுத்திரம் தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு அருகாமையில் உள்ள பன்னீர்கோட்டகம், கம்பி போட்ட மதகு அருகே உள்ள கொள்ளிடம் கூட்டு குடிநீர்த்திட்டத்தின் கீழ் நிலத்தடி நீர்த் தேக்கத் தொட்டியிலிருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு 495 மீட்டர் தூரத்துக்கு கடந்த 2004ம் ஆண்டு புதியதாக குழாய் பூமிக்கடியில் புதைக்கப்பட்டு, கூட்டுகுடிநீர் வழங்கப்பட்டு வந்தது.  இந்த குடிநீர்க் குழாய்கள் பழுதடைந்து விட்டதால் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் பழுதடைந்த பகுதிகளில் வேறு குழாய் பொருத்துவதற்கு பொக்லைன் இயந்திரம் மூலம் 5 அடி அகலத்திற்கு கடந்த மாதம் 28ம் தேதி பள்ளம் தோண்டப்பட்டு பணி நடைபெறுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. சாலை போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளது.

இந்தப் பள்ளத்தில் அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் விளையாடும் போது தடுமாறி விழுந்தால் உயிருக்கே ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம். எனவே பழுதடைந்த குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய் பதிக்கவும், பள்ளங்களை மூடவும், வழக்கம் போல வழங்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவும் கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : accident ,drinking water pipe ,village ,Colliery ,Kodakaramamulai ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...