×

வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த வானிலையால் மக்கள் மகிழ்ச்சி

விருதுநகர், டிச.18: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் விட்டு, சாரல் மழை பெய்து இதமான வானிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் சராசரி மழையளவான 820.10 மி.மீ யை நெருங்கி 810 மி.மீ வரை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் 8 அணைகளில் பெரியார், கோவிலாறு, சாஸ்தா கோவில் ஆகிய 3 அணைகள் தவிர்த்து வெம்பக்கோட்டை, கோல்வார்பட்டி, ஆனைக்குட்டம், குல்லூர்சந்தை, இருக்கன்குடி ஆகிய 5 அணைகள் தரை தட்டி நிற்கின்றன.

தண்ணீர் உள்ள 3 அணைகளும் விவசாயத்திற்கு திறக்கப்பட்டு வருவதால் அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. மாவட்டத்தில் 1020 கண்மாய்களில் நூற்றுக்கணக்கான கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன. நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு, அடைப்புகளால் கண்மாய்களுக்கு தண்ணீர் வரவில்லை. நேற்று அதிகாலை முதல் மாவட்டத்தில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்த நிலையில் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த வானிலை நிலவியது. குளிர்ந்த வானிலையுடன் பெய்த சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags :
× RELATED கம்பிக்குடி கிராமத்தில் 10 ஏக்கர்...