×

தேவாரம் பகுதிகளில் நுண்ணீர் பாசனத்தால் தண்ணீர் சேமிக்கலாம் கண்டுகொள்ளாத வேளாண் பொறியியல்துறை அதிகாரிகள்

தேவாரம், டிச. 18:தேவாரம் பகுதிகளில் நுண்ணீர் பாசனத்தை பயன்படுத்தி விவசாயம் செய்வதால் தண்ணீரில் ஏற்படக்கூடிய சிக்கனம் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளுக்கு வழங்காமல் வேளாண்மைபொறியியல்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், கருக்கோடை, பல்லவராயன்பட்டி, மேலசிந்தலைசேரி உள்ளிட்ட கிராமங்கள் தண்ணீர் அதிகம் இல்லாத வறண்ட பகுதியாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் பெய்யக்கூடிய பருவமழையினால் தேக்கப்படும் தண்ணீரின் மூலமாக கிணறுகளில் மோட்டார் போட்டு விவசாயம் நடக்கிறது. குறிப்பாக பீன்ஸ், வாழை, தக்காளி, முருங்கை, உள்ளிட்ட பயிர்களின் விவசாயம் நடக்கிறது. மலையடிவாரத்தை ஒட்டி உள்ள நிலங்களில் கப்பை விவசாயம் நடக்கிறது. எனவே இப்பகுதிகளில் நுண்ணீர்பாசனம், மலையடிவாரத்தை ஒட்டி உள்ள நிலங்களில் பண்ணைக்குட்டை அமைத்தல், தெளிப்புநீர் பாசனம், ஹைட்ரோஜெல், போன்றவை மிக அவசியமானதாக உள்ளது.

இதனை வேளாண்மைத் துறையினரும், வேளாண்மை பொறியியல்துறை அதிகாரிகளும் இணைந்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சிகளை அளிக்க வேண்டும். ஆனால் இப்போதோ பெயரளவில் இப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதிலும் தேவாரம் பகுதிகளில் மிக அவசியமான இப்பயிற்சியை நடத்தாமல் வேளாண்மைத்துறை அதிகாரிகள் புறக்கணிக்கும் நிலை உள்ளது. இதனால் தண்ணீரை சிக்கனமாக விவசாயநிலங்களில் பயன்படுத்துவது, தண்ணீர் மேலாண்மை பற்றி எந்தவிதமான விழிப்புணர்வும் இல்லாமல் விவசாயிகள் உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கிணறுகளில் இருக்கும் தண்ணீரை சிக்கனமாக விவசாயிகள் பயன்படுத்தும்போது அதிகமான லாபத்தை ஈட்டலாம். விவசாயமும் பெருகும். ஆனால் வேளாண்மை பொறியியல் துறையினர் இதனை பற்றிய விழிப்புணர்வு அளிக்காமல் உள்ளது ஏமாற்றம் அளிக்கிறது’ என்றனர்.

Tags : areas ,Devaram ,
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்