×

வாடிப்பட்டி பேட்டைபுதூர் பகுதியில் குவிக்கப்படும் குப்பையால் மக்களுக்கு சுகாதாரக்கேடு பேரூராட்சி நிர்வாகம் கவனிக்குமா?

வாடிப்பட்டி, டிச. 18: வாடிப்பட்டியில் பஸ்நிலையம் அருகே, பேட்டைபுதூர்  பகுதியில் குவியும் குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாடிப்பட்டியில் பஸ்நிலையம் அருகே உள்ள பேட்டைபுதூர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், இப்பகுதியில் ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி, உதவி தொடக்க கல்வி அலுவலகம் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. நகரில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், தினசரி குப்பைகளை சேகரிக்காததால், பொதுமக்கள் பேட்டைபுதூர் பகுதியில் தெருவோரங்களில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதை அள்ளுவதற்கு பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை இல்லை என்கின்றனர். இதனால், அப்பகுதி பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது.

Tags : Wadipatti Pettiputtur ,area ,administration ,
× RELATED நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலையில்...