×

முசிறி, தொட்டியம், தா.பேட்டை ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2,605 பேரின் வேட்பு மனு ஏற்பு

முசிறி, டிச.18: முசிறி, தொட்டியம், தா.பேட்டை ஒன்றியத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முசிறி ஒன்றியத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்களில் பரிசீலனையில் 9 மனுக்களும், தொட்டியம் ஒன்றியத்தில் 9 மனுக்களும், தா.பேட்டை ஒன்றியத்தில் 3 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை முசிறி ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் 10,ஒன்றிய கவுன்சிலர் 102, ஊராட்சி மன்ற தலைவர் 173, ஊராட்சி வார்டு உறுப்பினர் 641 சேர்த்து 926 பேரும், தொட்டியம் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் 11, ஒன்றிய கவுன்சிலர் 85, ஊராட்சி மன்ற தலைவர் 142, ஊராட்சி வார்டு உறுப்பினர் 688 பேரும் சேர்த்து 926 நபர்களும், தா.பேட்டை ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் 4, ஒன்றிய கவுன்சிலர் 72, ஊராட்சித் தலைவர் 145, ஊராட்சி வார்டு உறுப்பினர் 537 சேர்த்து 758 நபர்கள் தற்போதைய நிலவரப்படி களத்தில் உள்ளனர்.

முசிறி, தொட்டியம், தா.பேட்டை மூன்று ஒன்றியங்களிலும் சேர்த்து 2,605 பேர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ள நிலையில் வரும் 19ம் தேதி வேட்பு மனுக்களை எத்தனை பேர் வாபஸ் பெறுகிறார்கள் என்பதை பொறுத்து இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் தேர்தல் பணிகள் குறித்து திருச்சி மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் லட்சுமி முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஏவூர், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தலுக்கான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தேர்தல் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

Tags : Musiri ,Thottiyam ,Thambettu ,government ,Pothu Union ,elections ,
× RELATED கோடைகாலம் என்பதால் குடிநீரை...