×

சிறு ஓடைகளில் தடுப்பணை கட்டி மழைநீரை ேசமிக்கலாம்

மன்னார்குடி, டிச. 18: சிறு ஓடைகளில் தடுப்பணை கட்டி மழைநீரை சேமிக்கலாம் என வேளாண் கருத்தரங்கில் உதவி செயற்பொறியாளர் அறிவுறுத்தினார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மகாதேவபட்டினம் கிராமத்தில் தஞ்சை தனியார் வேளாண் கல்லூரியின் சார்பில் கிராம வேளாண்பணி அனுபவ திட்டத்தின் கீழ் நவீன வேளாண்மையில் மண் மற்றும் நீர் மேலாண்மை என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான செயல் விளக்கம், கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு முன்னோடி விவசாயி வெங்கடேசன் தலைமை வகித்தார். தஞ்சை தனியார் வேளாண் கல்லூரியின் உதவி பேரா சிரியர் ஜெனிசியா, முன்னோடி விவசாயிகள் செல்வேந்திரன், மகாலிங்கம், மகாதேவபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வேளாண்மை பொறியல் துறை மன்னார்குடி உதவி செயற்பொறியாளர் அண்ணாதுரை பேசுகையில், விவசாயத்தில் நீரின் பயன்பாடு அதிகமாக தேவைப்பட்ட நிலையில் மக்களை இன்றளவும் காத்து வருவது இந்த பாசன முறைகள். விஞ்ஞான வளர்ச்சி காரணமாக நாம் அதிக ஆழத்தில் இருந்து நீரை உறிஞ்சி எடுத்தாலும் அவற்றை சில பாசன முறைகள் மூலம் பயிர்களுக்கு கொடுப்பதால் இன்னும் இயங்கிக்கொண்டு இருக்கிறோம். சிறு ஓடைகளில் குறுக்கே தடுப்பணைகள் கட்டி மழை நீரை சேமிக்கலாம். மேட்டுப்பகுதியில் இருந்து வரும் நீரை கிணற்றிற்கு முன்பாகவே ஒரு குழி எடுத்து அதில் தேக்கி வைப்பதன் மூலம் நிலத்தடி நீரை நாம் உயர்த்தலாம். பாய்ச்சும் நீர் ஆவியாவதை தடுப்பதன் மூலம் நீரை சேமிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மழைநீர் சேமிப்பை வலியுறுத்தி மகாதேவபட்டினம் அரசு மேல் நிலைப்பள்ளியில் இருந்து சமுதாய கூடம் வரை பள்ளி, கல்லூரி மாணவிகள், விவசாயிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும் கருத்தரங்கம் நடைபெற்ற அரங்கில் கண்காட்சி நடைபெற்றது. முன்னதாக கல்லூரி இறுதியாண்டு மாணவி மணிமொழி வரவேற்றார். முடிவில் இறுதியாண்டு மாணவி மகிமா நன்றி கூறினார்.

Tags : streams ,
× RELATED பொதுமக்கள் பாராட்டு கறம்பக்குடி...