×

உதயமார்த்தாண்டபுரம் தெற்குகாடு சாலை சீரமைக்க கோரி நாற்று நட்டு மக்கள் நூதன போராட்டம்

முத்துப்பேட்டை, டிச.18: உதயமார்த்தாண்டபுரம் தெற்குகாடுசாலையை சீரமைக்க கோரி நாற்று நட்டு மக்கள் நூதனபோராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி தெற்குகாடு பகுதியில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி சார்பில் அனைத்து அடிப்படை வசதிகளும் இல்லாமல் மக்கள் பல்வேறு சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.இந்நிலையில் இப்பகுதிக்கு முக்கிய சாலையாக கருதப்படும் உதயமார்த்தாண்டபுரத்திலிருந்து மாரியப்பா நகர் மண் சாலையானது இப்பகுதி மக்களுக்கு எந்தநேரமும் பயன்தரும் சாலையாகும், இந்த சாலை மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் இப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள் அன்றாடம் சென்று வர சிரமம் ஏற்பட்டது.

இது குறித்து பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்று சாலையை தார்சாலையாக மாற்றி தரவேண்டும் என மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.ஆனாலும் சாலை சீரமைக்க வில்லை. இந்நிலையில் சமீபத்தில் தொடர்ச்சியாக பெய்த மழையால் அந்த சாலை மக்கள் நடந்து கூட முடியாதளவில் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இப்பகுதி மக்கள் முற்றிலும் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு நூதனப்போரட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து பாலசுப்பிரமணியம் கூறுகையில், அதிகாரிகள் இனியும் அலட்சியம் காட்டினால் அடுத்த கட்ட போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் வரும் என்றார்.

Tags : road ,Udayamartandapuram ,
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...