×

தஞ்சையில் நடந்த மின்வாரிய கேங்மேன் தேர்வில் பெண் தகுதி

தஞ்சை, டிச. 18: தஞ்சையில் மின்வாரிய கேங்மேன் தேர்வில் முதல் பெண் தேர்வு பெற்றார்.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தஞ்சை மின் பகிர்மான வட்டத்தில் கேங்மேன் பணிக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 9ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் ஆண்கள், பெண்கள் பங்கேற்று தேர்வாகி வருகின்றனர். இதுவரை பெண்கள் யாரும் தேர்வாகவில்லை.

இந்நிலையில் நேற்று நடந்த தேர்வில் அரியலூர் மாவட்டம் தத்தனூர் கிழக்கு, வளவட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்த பெண்ணரசி (37) என்ற திருமணமான பெண் தேர்வு பெற்றார். தஞ்சையில் நடந்து வரும் தேர்வில் இவர் தான் முதல் பெண்ணாக தேர்வாகியுள்ளார் என்று தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சங்கரன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கலெக்டர் அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் துவக்கம்