×

பெரம்பலூரில் நடந்தது பெரம்பலூரில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை பார்வையாளர் ஆய்வு

பெரம்பலூர்,டிச.18: உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் பார்வையாளர் அணில் மேஷ்ராம் நேரில் ஆய்வு செய்தார்.ஊரக உள்ளாட்சி அமைப் புகளுக்கான தேர்தல்கள் வரும் 27,30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை பெரம்பலூர் மாவட்டத்தில் சுமூகமாகவும், அமைதியாகவும் நடத்திடும் பொருட்டு, தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் பெரம்ப லூர் மாவட்டத்திற்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளராக மாநில திட்டக்குழு ஆணையத்தின் உறுப்பினர் செயலரான அணில்மேஷ்ராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து மாநில திட்டக்குழு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் நேற்று (17ம் தேதி) ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீது நடைபெற்று வரும் கூர்ந்தாய்வு பணிகள் தொடர்பாக வேப்பூர் ஒன்றிய அலுவலகத்திலும், வேப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட உள்ள வாக்குப்பெட்டி வைப்பறைகள் மற்றும் வாக்கு எண்ணும் மையம் தொடர்பாகவும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத்தொட ர்ந்து வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அன்னமங்கலம் ஊராட்சி, அரசலூர் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய வாக்குபெட்டிகள் வைக்கப்படும் அறைகளில் மேற்கொ ள்ளப்பட உள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள், பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் கழிப்பறை வசதிகளை ஏற்பாடு செய்வது குறித்தும் ஆய்வு செய்தார். அதற்கான அறிவுரைகளை அலுவலர்களுக்கு தெரிவித்தார்.ஆய்வின்போது திட்ட இயக்குநர் தெய்வநாயகி, மகளிர் திட்ட இயக்குநர் தேவநாதன், தணித்துணை கலெக்டர் (ச.பா.தி) சக்திவேல் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்