×

42 ஊராட்சிகளில் மகேந்திரப்பள்ளி ஊராட்சியில் ஒரு வேட்பு மனு தள்ளுபடி

கொள்ளிடம், டிச.18:  கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த இரண்டு மாவட்ட ஊராட்சிக்குழு வார்டு உறுப்பினர்களுக்கு 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 13 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒன்றியத்த்தில் உள்ள 23 ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு 165 பேர் மனு தாக்கல் செய்ததில் 46 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 161 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மொத்தமுள்ள 42 ஊராட்சிகளில் ஊராட்சி மன்றத் தலைவருக்கு 247 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் மகேந்திரப்பள்ளியில் மட்டும் ஒரு மனு நிராகரிக்கப்பட்டு 247 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 1241 பேர் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மனுதாக்கல் செய்ததில் 6 மனுக்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டு 235 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Tags : Mahendra Palli ,candidate ,
× RELATED கொள்ளிடம் அருகே கடைவீதியில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது