×

அளக்குடி காவல்மானியம் கிராமத்தில் 2 ஆண்டாக பூட்டியே கிடக்கும் புதிய அங்காடி கட்டிடம்

கொள்ளிடம், டிச.18: கொள்ளிடம் அருகே அளக்குடி காவல்மானியம் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாத புதிய அங்காடி கட்டிடத்தை உடனே திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடியில் உள்ள 1140 குடும்ப அட்டைகளை கொண்ட அங்கன்வாடி இயங்கி வந்தது. இந்த அங்கன்வாடியிலிருந்து வெள்ளைமணல், காடுவெட்டி, காவல்மானியம் மற்றும் தோணிதுறை ஆகிய பகுதிகளை பிரித்து, காவல்மானியம் கிராமத்தில் 287 குடும்ப அட்டைகளை பிரித்து கூட்டுறவு சங்கத்தின் ஒப்புதலின் பேரில் கிராம மக்கள் சார்பில் இலவசமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அங்காடி கட்டப்பட்டு முதலைமேடு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தின் பெயரில், கொள்ளிடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு முதலைமேடு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்திடம் ஒப்டைக்கப்பட்டுள்ளது.

மேலும் நாகப்பட்டினத்தில் மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எம்.எல்.ஏ பாரதி, அளக்குடி காவல்மானியம் கிராமத்தில் உள்ள புதிய அங்காடி கடையை திறக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்நிலையில் மேற்கண்ட இடத்தில் பகுதி நேர அங்கன்வாடி திறக்க கொள்ளிடம் சார்பதிவாளரால் முன்மொழிவு பிரேரணை தயாரிக்கப்பட்டு நாகப்பட்டினம் கூட்டுறவு இணைபதிவாளரால் மாவட்ட வழங்கல் அலுவலர் மூலம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்ட்டுள்ளது. எனவே வரும் பொங்கல் பண்டிகைக்குள் அளக்குடி காவல்மானியம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பகுதிநேர அங்காடி கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : store building ,village ,Kavalmaniyam ,
× RELATED கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி