×

வாய்க்காலில் மண்டிய கோரை புற்கள் தோகைமலையில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணி

தோகைமலை, டிச. 18: கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்தில் வருகின்ற 30ம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை ஒட்டி வாக்கு சாவடிகள், ஓட்டு எண்ணும் இடங்கள் உள்பட அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்ட தேர்தல் பார்வையாளரும் சமூகபாதுகாப்பு திட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் ஆணையருமான வெங்கடேசன் நேற்று தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.அப்போது சாதி, மதம், உள்ளூர், உறவினர், ஆளும்கட்சி, எதிர்கட்சிகள் என்ற அடிப்படையில் பாரபட்சம் காட்டாமல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் கடமை உணர்வுடன் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்.
புகார்கள் வந்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கு அதற்கான அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும். தேர்தலுக்கான வாக்குசாவடிகள், ஓட்டு எண்ணும் இடங்களில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

தேவை ஏற்படும் நிலையில் உடனடியாக தபால் மூலம் அளித்து காலதாமதம் ஏற்படுத்தாமல் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் சென்ற ஆண்டுகளை காட்டிலும் கூடுதலாக டேபிள்களை அமைத்து காலதாமதம் ஏற்படுத்தாமல் பணிகள் நடக்க ஏற்பாடுகள் செய்தல் வேண்டும்.அதிகாரிகளின் உறவினர்கள் தேர்தலில் போட்டியிட்டால் அவர்களுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்வேறு ஆலோசனைகள் அதிகாரிகளுக்கு வழங்கினார்.ஒன்றிய ஆணையர்கள் ராஜேந்திரன், ராணி உள்பட தேர்தல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : election campaign ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...