×

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் இடத்தை ஆக்கிரமித்து கடை நடத்தினால் நடவடிக்கை: நிர்வாகம் எச்சரிக்கை

மாமல்லபுரம், டிச. 18: மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் இடத்தை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக மாமல்லபுரம் விளங்கி வருகிறது. இங்கு பேருந்து நிலையம் அருகே சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான  தலசயன பெருமாள் கோயில் உள்ளது. மேலும், புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை கல் உள்ளிட்ட இடங்களில் சிறு வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து சாலையோரத்தில் கடைகள் அமைத்தனர்.

இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. பிரதமர் மோடி மற்றும் சீன நாட்டு அதிபர் ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரம் வருவதற்கு முன்பாக சாலையோரக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இந்நிலையில் சிறு வியாபாரிகள் அர்ச்சுனன் தபசு எதிரே உள்ள  தலசயன பெருமாள் கோயில் இடத்தை ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு கடைகளை உடனே அகற்ற வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், கோயில் இடத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் கடுமையாக எச்சரித்துள்ளது.

Tags : temple site ,Mamallapuram Thalassayana Perumal ,
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர்...