×

மாமல்லபுரத்தில் மார்கழி பஜனை வழிபாடு துவக்கம்

மாமல்லபுரம், டிச. 18: மாமல்லபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிருஷ்ணர் கோயிலில் மார்கழி பஜனை நேற்று தொடங்கியது. நேற்று அதிகாலை 6 மணிக்கு புறப்பட்ட பஜனை குழுவினர் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஸ்ரீதலசயன பெருமாள் கோயில் மண்டபம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை கல், கணேச ரதம் உள்ளிட்ட இடங்கள் வரை சென்றனர்.

அப்போது ஆண்டாளின் திருப்பாவை, திருவெண்பாவை பாசுரங்கள் பாடல்களை பாடிக் கொண்டு கிருஷ்ணரை போற்றி பஜனை குழுவினர் மனமுறுகி வணங்கினர். அப்போது, சுமங்கலி பெண்கள் பஜனை குழுவினர் கொண்டு வந்த அணையா விளக்கில் சில்லரை காசுகளை காணிக்கையாக போட்டு கிருஷ்ணரை வணங்கினர். பிறகு பஜனை மீண்டும் கோயிலை வந்தவுடன் நவநீதகிருஷ்ணருக்கு  சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. இந்த மார்கழி மாத பஜனை ஊர்வலத்தில் வைணவ பத்தர்கள், பெரியர்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Worshipful Pagan Worship ,Mamallapuram ,
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...