×

நாட்டின மாடுகள் குறைந்து வருவதால் பசுமாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் முகாம்

திருத்தணி, டிச. 18: நாட்டின மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், மாவட்டம் முழுவதும் பசு மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் திட்டத்தின் மூலம் தடுப்பு ஊசிகள் போடும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில், விவசாயிகள் கால்நடை வளர்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறது. மேலும், நாட்டின பசு மாடுகள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதையடுத்து, மாவட்ட கால்நடை துறையினர், பால் உற்பத்தி, கால்நடைகள் எண்ணிக்கை அதிகரிக்கவும், நாட்டின பசுக்களை பாதுகாக்கும் வகையில், தேசிய செயற்கை முறையில் கருவூட்டல் திட்டம், 2018-19ம் ஆண்டு திட்ட தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில், 100 கிராமங்களை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு கிராமத்திலும், 200 நாட்டின பசு மாடுகளை தேர்வு செய்து, வருடத்திற்கு மூன்று முறை செயற்கை கருவூட்டல் தடுப்பு ஊசி போடப்பட இருக்கிறது. இதன் மூலம், நாட்டின கால்நடைகளை அதிகரிக்கும் வகையில், கால்நடை துறையினர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து கால்நடை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘செயற்கை முறையில் கருவூட்டல் திட்டம் கடந்த, செப்.15ம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி செயல் முறையில் இருக்கும். மாவட்டத்தில், 20 ஆயிரம் நாட்டின பசு மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் தடுப்பு ஊசி போடப்பட உளள்ளது. மூன்று முறை போடும் ஊசி தற்போது ஒரு முறை போடப்பட்டுள்ளது.

மீதமுள்ள இரு முறை வரும் மார்ச் 15ம் தேதிக்குள் தேர்வு செய்யப்பட்ட பசு மாடுகளுக்கு கருவூட்டல் ஊசி போடப்படும். ஒவ்வொரு கால்நடை உதவி இயக்குனர் அலுவலகத்தில் திருத்தணி 30; திருவள்ளூர் 30; பொன்னேரி 20; அம்பத்தூர் 20; மொத்தம், 100 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தபட்டு உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : insemination ,camp ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு