×

களக்காடு, நாங்குநேரியில் மார்கழி பஜனை துவக்கம்

களக்காடு, டிச. 18:  தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அதிகாலை சுவாமி தரிசனம் செய்வது விஷேசமாகும்.  எனவே மார்கழி மாதங்களில் இந்து கோயில்களில் பஜனை வழிபாடுகள் நடைபெறுவது  வழக்கம். அதன்படி மார்கழி மாதத்தின் முதல் நாளான நேற்று களக்காடு  சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோயிலில் மார்கழி மாத பஜனை தொடங்கியது.  அதிகாலையில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பக்தி பாடல்களை பாடியவாறு  ரதவீதிகளில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் சத்தியவாகீஸ்வரர், கோமதி  அம்பாள், கோபுர விநாயகர் உள்பட சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.  

இதேபோல் களக்காடு வரதராஜ பெருமாள் கோயிலிலும் மார்கழி பஜனை தொடங்கியது.  பக்தர்கள் திரளானோர் பெருமாள் பாடல்களை பாடியவாறு பஜனை ஊர்வலம் நடத்தினர்.  களக்காடு நினைத்ததை முடித்த விநாயகர் கோயிலிலும் பஜனை தொடங்கி நடந்து  வருகிறது. இதேபோல் நாங்குநேரியில் மார்கழி மாத பிறப்பையொட்டி நேற்று முதல் பஜனை ஊர்வலம் துவங்கியது. பல்வேறு குழுவினர், இசை வாத்தியங்களுடன் பக்தி பாடல்களை பாடியபடி சென்றனர். ஆண்டாளின் திருப்பாவை, நாயன்மார்களின் திருவம்பாவை, பிற தோத்திரப் பாடல்களும் பாடினர். மேலும் நாங்குநேரி பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு மற்றும் ராப்பத்து, பகல்பத்து வழிபாடுகளும் நடக்க உள்ளன.

Tags : Morgani Bhajan ,Nankuneri ,
× RELATED மணக்காடு, அரியகுளம் பகுதியில்...