×

சிறுபான்மையினர், ஈழத்தமிழர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மன்னிக்க முடியாத துரோகம்

தூத்துக்குடி, டிச. 18: குடியுரிமை சட்ட திருத்தத்தின் மூலம் சிறுபான்மையினர், ஈழத்தமிழர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மன்னிக்க முடியாத துரோகம் விளைவித்துள்ளதாக தூத்துக்குடியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. பேசினார்.
 குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தும், இதை உடனடியாக மத்திய அரசு வாபஸ்பெற வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் திமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே போல் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்த மத்திய அரசையும், அதற்கு ஆதரவு  அளித்த அ.தி.மு.க அரசையும் கண்டித்து வடக்கு மாவட்ட தி.மு.க.  சார்பில் தூத்துக்குடி டூவிபுரம் 5வது தெரு சந்திப்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. பேசுகையில், ‘‘ குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் மத்திய பா.ஜ. அரசு, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான மதசார்பின்மை, சமஉரிமை,  உள்ளிட்ட அனைத்தையும் தகர்த்துள்ளது. இதற்கு தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசு துணைநின்றது.

குடியுரிமை சட்ட திருத்தம் மூலம், சிறுபான்மையினர் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளன. மத்திய பா.ஜ. அரசின் சிறுபான்மையினர் விரோத, தமிழர் விரோத செயல்கள் அனைத்திற்கும் தமிழின விரோத அ.தி.மு.க. அரசு பல்லக்கு தூக்குவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது’’ என்றார். ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி  முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், கோவில்பட்டி நகரச் செயலாளர் கருணாநிதி, மாவட்ட அணி செயலாளர்கள் இளைஞர் அணி மதியழகன், மீனவர் அணி அந்தோணி ஸ்டாலின், மகளிர் அணி கஸ்தூரி தங்கம்,  ஆதி திராவிடர் நல அணி பரமசிவம், தொண்டர் அணி ரமேஷ், நெசவாளர் அணி சங்கரநாராயணன், பொறியாளர் அணி அன்பழகன், மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் பாலகுருசாமி, சங்கர், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், ராஜா, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், பகுதி துணைசெயலாளர்கள் பாலு, முத்துவேல், மாநகர துணைச்செயலாளர்கள் கீதா முருகேசன், நிர்மலா, பொருளாளர் அனந்தையா, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த கேபிரியல் ராஜ், துணைஅமைப்பாளர்கள் செல்வின், சங்கர நாராயணன், நிர்மல் ராஜ், ஜார்ஜ் புஷ், இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், மாவட்டப் பிரதிநிதி கதிரேசன், மீனவர் அணி துணை அமைப்பாளர் அகஸ்டின், வக்கீல் அணி துணை அமைப்பாளர் நாகராஜன் பாபு, கயத்தாறு விஸ்வநாதராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பெண்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி கோஷமிட்டனர்.

Tags : state governments ,treachery ,Eelam ,
× RELATED யானை வழித்தடத்தில் உள்ள மின்...