×

முதுமலைக்கு வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

கூடலூர்: கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்பதால் முதுமலைக்கு வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து விட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளை அடுத்து கடந்த 3ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.வாகன சவாரி, யானைகள் முகாமில் யானைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 6ம் தேதி யானை சவாரி தொடங்கப்பட்டு மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இங்கு உள்ள சுற்றுலா விடுதிகளும் 6ம் தேதி முதல் திறக்கப்பட்டன.      முதுமலை புலிகள் காப்பகத்துக்கு தமிழக சுற்றுலா பயணிகளை விட கேரளா, கர்நாடகா மாநில சுற்றுலா பயணிகளே அதிகம் வந்து செல்கின்றனர். கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளிலிருந்து மாநில எல்லைக்குள் வரும் அனைவரும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதன் காரணமாக கேரளா சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்ததோடு, கர்நாடகா சுற்றுலாப் பயணிகள் முதுமலை புலிகள் காப்பக எல்லையை ஒட்டி அம்மாநில எல்லையில் அமைந்துள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு மட்டும் சென்று திரும்பி விடுகின்றனர். இதன் காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலா விடுதிகளும் காலியாகவே உள்ளன.      கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தொடர் விடுமுறை தினங்களில் ஓரளவு சுற்றுலாப் பயணிகள் வந்த நிலையில் வார நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து காணப்படுகிறது.இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புலிகள் காப்பக வரவேற்பு பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் அழகிய சிறு பூங்காக்கள் அமைத்து பொலிவு படுத்தப்பட்டும் உள்ளன….

The post முதுமலைக்கு வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Mumbumalai ,Cuddalore ,Mudumalai ,Nilgiri ,Avalanche ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...