×

கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு திமுகவினர் மனு தாக்கல்

இடைப்பாடி, டிச.17: இடைப்பாடி சட்டமன்ற தொகுதி கொங்கணாபுரம் ஒன்றியத்தில், திமுக ஒன்றிய செயலாளர் பரமசிவம் 6வது வார்டில் ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிக்கும், 1வது வார்டு கோவிந்தசாமி, 2வது வார்டு மாயவன், 3வது வார்டு அருள் முருகன், 4வது வார்டு ரேவதி, 5வது வார்டு பெரியதம்பி, 7வது வார்டு மாரியம்மாள், 8வது வார்டு கவிதா, 9வது வார்டு வசந்தி, 10வது வார்டு கோமதி மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு முருகேசன் மற்றும் ஊராட்சி தலைவர்கள் பதவிக்கு போட்டியிடுபவர்கள் நேற்று கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தனர்.

சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாவட்ட துணை ெசயலாளர் சம்பத்குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணியம், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு, சித்தையன், பழனிசாமி, கந்தன் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,government ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து...