×

குமாரபாளையம் அன்பு கலை அறிவியல் கல்லூரியில் ஆன்மிக சொற்பொழிவு

குமாரபாளையம், டிச.17: ஆசிரியர்களால் இந்த சமுதாயம் மேம்படுமென குமாரபாளையம் அன்பு கல்லூரியில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவில் திருப்பராய்த்துறை தபோவனத்தின் சொற்பொழிவாளர் சச்சிதானந்தா பேசினார். குமாரபாளையம் அன்பு கலை அறிவியல் கல்லூரியில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி திருப்பராத்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தின் சொற்பொழிவாளர் சச்சிதானந்தா சொற்பொழிவாற்றினார்.

அப்போ, அவர் பேசியதாவது: ஆசிரியர்கள் சரியான முறையில் தங்களது பணியினை செய்தால் சமுதாயம் செம்மையுறும். மாணவர்கள் அறிவின் உச்சநிலையை அடைய முடியும். ஆசிரியர்கள் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் தூண்டுகோலாக இருக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொள்ளப் பயன்படுவதுதான் பக்தி. மனித தன்மை, தெய்வத்தன்மை, ஞானத்தன்மை, சகிப்புத்தன்மை ஆகிய படிநிலைகளை பெற வேண்டும். கல்லூரி பருவத்தில் மாணவர்கள் ஒழுக்கமானவர்களாகவும், அன்பு காட்டுபவர்களாகவும் விளங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக கல்லூரியின் முதல்வர் சுப்பிரமணியம் வரவேற்றார். முடிவில் கல்வி நிறுவனத்தின் அறங்காவலர் ரமேஷ் நன்றி கூறினார்.

Tags : Kumarapalayam ,
× RELATED சிட்டு குருவிகளுக்கு உணவு அளிக்க மாணவிகள் உறுதி