×

மதுக்கூர் பெரியகோட்டையில் ஆனைக்கொம்பன் ஈயின் தாக்கம் குறித்து வேளாண் உற்பத்தி ஆணையர் ஆய்வு

பட்டுக்கோட்டை, டிச. 17: மதுக்கூர் பெரியகோட்டையில் ஆனைக்கொம்பன் ஈயின் தாக்கம் குறித்து வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங்க பேடி ஆய்வு செய்தார். பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் வட்டாரத்தில் 3,900 எக்டேரில் சம்பா நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இதில் வளர்ச்சி பருவத்தில் இருந்த நெற்பயிர்களில் டிசம்பர் மாதத்தில் பெறப்பட்ட அதிக மழை மற்றும் காற்றின் அதிக ஈரப்பதத்தால் ஆனைக்கொம்பன் ஈயின் திடீர் தாக்கத்தினால் அதிகளவில் பயிர்களின் வளர்முனை பாதிக்கப்பட்டது. இதை வேளாண்மைதுறை அலுவலர்கள் கண்காணித்து அனைத்து கிராமங்களிலும் ஆனைக்கொம்பன் ஈயை கட்டுப்படுத்த உரிய பயிர் பாதுகாப்பு முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிலையில் ஆனைக்கொம்பன் ஈயின் தாக்கத்தை பற்றி நேரில் அறிந்து கொள்ளும் வகையில் பெரியகோட்டை கிராமத்தில் ஆனைக்கொம்பன் ஈ யின் தாக்கம் மற்றும் வேளாண்மைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட பயிர் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி மற்றும் தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் விவசாயிகளிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தனர். மேலும் வயல்களில் பூச்சிமருந்து இன்றி இயற்கை முறையில் மஞ்சள் வண்ண ஒட்டு பொறிகள் பயன்படுத்துவதன் நன்மைகள் குறித்து வேளாண்மை இணை மற்றும் துணை இயக்குனர்கள் ஜஸ்டின், பரமசிவம், சிங்காரவேலு, சாருமதி ஆகியோரிடம் கேட்டறிந்தார். இதைதொடர்ந்து வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு விடுபாடின்றி செய்ய கேட்டு கொண்டார். மேலும் ஆனைக்கொம்பன் ஈ யின் வாழ்க்கை சுழற்சி மற்றும் தற்போது பயிர் பாதுகாப்பு கொண்டபின்பு பயிரின் தற்போதைய நிலை குறித்து விவசாயிகளிடம் தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் கேட்டறிந்தார். மாவட்ட அளவிலான ஆனைக்கொம்பனின் தாக்கத்தை கட்டுப்படுத்த அனைத்து வட்டாரங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு இயக்கங்கள் மற்றும் வழங்கப்பட்ட தொழில்நுட்ப செய்திகள் குறித்து வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் விளக்கி கூறினார்.

ஆனைக்கொம்பன் ஈயின் கட்டுப்பாட்டில் பிளாட்டிகேஸ்டர் ஒட்டுண்ணிகளின் நன்மைகள் குறித்து வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை இணை இயக்குனர் மதிராஜன் எடுத்து கூறினார். பயிர் காப்பீடு கருத்து காட்சியை வேளாண்மை உதவி இயக்குநர் சுதா விளக்கி கூறினார். அட்மா திட்ட அலுவலர்கள் லீலா, பெனிக்சன், சரவணி ஆகியோர் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு கிட்டுகளை வழங்கினர். பெரியகோட்டை விவசாய உற்பத்தியாளர் குழு தலைவர் சுரேஷ் மற்றும் பொருளாளர் ரெங்கசாமி மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வேளாண் ஆணையரிடம் ஆனைக்கொம்பன் தாக்கம் பற்றி எடுத்து கூறினர். வேளாண்மை துணை அலுவலர் கலைச்செல்வன், வேளாண்மை உதவி அலுவலர்கள் பாபி, ஜாகிர் உசேன், முருகேசு, கார்த்திக் ஆகியோர் ஆய்வு பணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags : Commission ,
× RELATED நலத்திட்ட உதவிகள் கிடைக்காவிட்டால்...