ஏராளமானோர் மனுதாக்கல் கும்பகோணம் அருகே குளத்தில் திருட்டுத்தனமாக மீன் பிடித்த 2 பேர் கைது

கும்பகோணம், டிச.17: கும்பகோணம் அருகே குளத்தில் திருட்டுத்தனமாக மீன் பிடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கும்பகோணம் அடுத்த காவற்கூடம் மேலத்தெருவை சேர்ந்தவர் பிரபுதாஸ் (45). இவர் அதே பகுதியில் 2 ஏக்கரில் குளம் வெட்டி அதில் மீன் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த செல்வம் (30), நீலத்தநல்லூரை சேர்ந்த கண்ணன் (45) ஆகியோர் திருட்டுத்தனமாக மீன் பிடித்துள்ளனர். இதுகுறித்து சுவாமிமலை போலீசில் பிரபுதாஸ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து செல்வம், கண்ணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து வலைகள் மற்றும் மீன்களை பறிமுதல் செய்தனர்.

Tags : persons ,Kumbakonam ,pond ,
× RELATED கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் மேலவீதி,...