×

ஒண்டிப்புதூர் அருகே தரைப்பாலம் அமைக்க எதிர்ப்பு கோவை, டிச. 17: ஒண்டிப்பு

தூர் சிவலிங்கபுரத்தில் மேம்பாலத்திற்காக ஆணை பிறப்பித்துவிட்டு, தற்போது தரைப்பாலம் அமைக்கும் அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர். கோவை ஒண்டிப்புதூர் அடுத்த சிவலிங்கபுரத்தில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே டிராக்கில்  தினமும் ஏராளமான ரயில்கள் செல்கிறது. இதனால், ரயில்வே கிராசிங்கை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதாக கூறி மேம்பாலம் கட்ட வேண்டும் என வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து கடந்த 2011ல் மேம்பாலம் கட்ட ஆணை பிறப்பித்தனர். ஆனால், கடந்த 8 வருடங்களாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்பகுதியில் மேம்பாலத்திற்கு பதிலாக தரைப்பாலம் அமைப்பது என அரசு முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது இப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில் தரைப்பாலம் அமைத்தால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்படும். எனவே, தரைப்பாலம் கட்டக்கூடாது. மேம்பாலம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி வடகோவையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தை முற்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்தார். கோட்ட பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பேசினார். பின்னர், தற்போது தேர்தல் காலமாக இருப்பதால், ஜனவரி முதல் வாரத்தில் அதிகாரிகளை சந்தித்து மேம்பாலம் அமைக்க வலியுறுத்தப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Tags : bridge ,Ondipudur 17 ,
× RELATED பீகாரில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது