×

திருவொற்றியூர் உடற்பயிற்சி கூடத்திற்கு 5.89 லட்சம் உபகரணங்கள் : கே.பி.பி.சாமி எம்எல்ஏ வழங்கினார்

திருவொற்றியூர்: திருவொற்றியூர்  கே.வி.கே.குப்பம், சின்ன  எர்ணாவூர், பலகை தொட்டி குப்பம்  போன்ற பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் உடற்பயிற்சி செய்யும் வகையில்  திருவொற்றியூர் சக்திபுரம் மாநகராட்சி பூங்கா அருகே உள்ள ரங்கம் நியூடவுன்  உடற்பயிற்சி கூடத்திற்கு, நவீன உடற்பயிற்சி உபகரணங்கள் வாங்குவதற்கு கே.பி.பி.சாமி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ₹5 லட்சத்து 89 ஆயிரம் ஒதுக்கீடு செய்தார்.  

அதன்படி வாங்கப்பட்ட உபகரணங்களை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருவொற்றியூர்  மண்டல உதவி ஆணையர் தங்கபால்துரை தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்  வேலுச்சாமி வரவேற்றார். கே.பி.பி.சாமி எம்எல்ஏ உடற்பயிற்சி உபகரணங்களை பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில், அதிகாரிகள் ஜெயக்குமார், திமுக நிர்வாகிகள் பரசுபிரபா, குமரேசன்,,எம்.வி.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvottiyur Gymnasium ,KPPSamy MLA ,
× RELATED திருவொற்றியூர் உடற்பயிற்சி...