×

தண்டையார்பேட்டையில் பிரபல கடை பிரியாணியில் அட்டைபூச்சி : சாப்பிட்டவருக்கு வாந்தி, மயக்கம்

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை ஜவான்மால் சவுகார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (30),  வேன் டிரைவர். இவர், நேற்று முன்தினம் மதியம் தனது நண்பர்கள் சுதாகர் (40), வினோத்குமார் (25) ஆகியோருடன் தண்டையார்பேட்டை சேணியம்மன் கோயில் தெருவில் உள்ள பிரபல பிரியாணி கடைக்கு சென்றார். அங்கு, 2 பிரியாணி பார்சல் வாங்கிக் கொண்டு புறப்பட்டனர். பின்னர், புதுவண்ணாரப்பேட்டை, இளையமுதலி தெருவில் வேனை நிறுத்திவிட்டு அனைவரும் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அப்போது ஒரு பார்சலில் அட்டை பூச்சி கிடந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே பிரியாணியை சாப்பிட்ட சீனிவாசனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து புகார் கொடுக்க சீனிவாசனின் நண்பர்கள், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு சென்றனர். அவர்களிடம் விசாரித்த போலீசார், ‘பிரியாணி கடை இருக்கும் இடம் தண்டையார்பேட்டை காவல்நிலைய எல்லையில் வருவதால் அங்கு புகார் கொடுங்கள்’ என்றனர். இதையடுத்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்துக்கு அவர்கள் சென்றபோது கடை எங்கள் எல்லையில் இல்லை. புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள்’ என்று தெரிவித்துள்ளனர். இதனால் புகார் கொடுக்க முடியாமல் அவர்கள் தவித்தனர். இதனிடையே, இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : shop ,eater ,
× RELATED லாரி மீது இருசக்கர வாகனம் மோதி ஜூஸ் கடை ஊழியர் பலி