×

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து நாகூர் தர்கா டிரஸ்டிகள் பதவியேற்பு

நாகை, டிச.17: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து உலக புகழ் பெற்ற நாகூர் தர்கா டிரஸ்டிகள் பதவியேற்று கொண்டனர். உலகப்புகழ் பெற்ற நாகூர் தர்கா நாகை மாவட்டத்தில் உள்ளது. இது 180 ஆண்டுகள் பழமைவாய்ந்தது ஆகும். ஜாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் தர்காவிற்கு வந்து செல்கின்றனர். நாகூர் தர்காவை நிர்வாகம் செய்ய 8 பேர் கொண்ட அறங்காவலர்கள் நிர்வாகம் செய்து வந்தனர். அறங்காவலர் குழுவை தவிர ஆலோசனை குழுவும் உள்ளது. ஆலோசனை குழு பொருளாதாரம் மற்றும் ஆலோசனைகளை உள்ளடக்கியது. நிர்வாகம் சிலவற்றை அறங்காவலர் குழு செய்து வரும். 8 பேர்களை கொண்ட அறங்காவலர் குழுவில் 8வது அறங்காவலாராக இருந்த ஹஜ்ரத் ஹாஜா வஞ்சுர் பக்கிர் என்ற சின்னதம்பி சாஹிப் நேரடி வாரிசு இல்லாமல் கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி இறந்தார். இந்த அறங்காவலர் பதவி இடத்திற்கு வாரிசுதாரர்கள் பலரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு தலைமை அறங்காவலர் பதவி காலம் முடிந்தது. எனவே எட்டாவது அறங்காவலர் இல்லாத காரணத்தினால் தலைமை அறங்காவலர் தேர்தல் நடத்த முடியவில்லை. மேலும் காமீல் சாஹிப் என்பவர் தன்னை 8வது அறங்காவலராக நியமிக்க வேண்டும் என்று உரிமை கோரினார்.

இந்த பிரச்னைகள் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொரப்பட்டது. சமரச குழு அமைக்கும் வரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நாகூர் தர்கா நிர்வாகம் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் கீழ் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் நிர்வாகம் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆண்டுதோறும் நாகூர் தர்கா கந்தூரி சமயத்தில் புனித கிரியைகள் செய்ய வாரிசுதார்ர்களுக்கு உயர் நீதிமன்றம் நேரடியாக உத்தரவு வழங்கியும் வந்தது.
இதன் பின்னர் சமரச கமிட்டி அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம் உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராஹிம்கலிபுல்லா, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, அக்பர் அலி ஆகியோர் அடங்கிய சமரச குழுவை அமைத்தது. இந்த குழு விரைந்து சமரச முடிவுகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து இரு தரப்பிலும் பேசி 8வது அறங்காவலராக கமீல் சாஹிப்பை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் வந்தது. நீதிபதி சிவஞானம் வழக்கை விசாரணை செய்து எட்டாவது அறங்காவலர் விஷயம் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே அறங்காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் தர்கா நிர்வாகத்தை இடைக்கால நிர்வாக அதிகாரி அறங்காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் வரும் ஜனவரியில் தொடங்க உள்ள நாகூர் தர்கா கந்தூரி விழாவை அறங்காவலர் குழு அமைதியாக நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதையடுத்து அதன்படி நேற்று நாகூர் தர்கா அலுவலகத்தில் ஆலோசனை உறுப்பினர்கள் கொண்ட குழு கூட்டம் நடந்தது. இதில் நாகூர் தர்கா டிரஸ்டிகள் காமில் சாஹிப், சுல்த்தான் கலீபா சாஹிப், ஹாஜா நஜ்முதீன் சாஹிப், செய்யது யூசுப் ஆகிய 4 பேர் டிரஸ்டிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து இந்த 4 பேரும் பதவியேற்று கொண்டனர். இதனால் கடந்த ஆறு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நாகூர் தர்கா நிர்வாக வழக்கு முடிவு வந்தது

Tags : Nagore Dharga Trustees ,Chennai High Court ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி...