×

காரைக்கால் வாகன பேன்ஸி எண்கள் ஏலம்

புதுச்சேரி, டிச. 17:  புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி போக்குவரத்து துறையின் PY-02 U (காரைக்கால்) வரிசையில் உள்ள பேன்ஸி எண்களை https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் வரும் 18ம் தேதி காலை 11 மணி முதல் ஜனவரி 8ம் தேதி மாலை 4.30 மணி வரை ஏலம் விடப்பட உள்ளது. எனவே, இந்த ஏலத்தில் பங்கு பெறுவதற்கு தேவையான பெயர் மற்றும் கடவுச் சொல்லை http://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் `New Public User’ மூலமாக வரும் 18ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்தவர்கள் மட்டுமே ஜனவரி 2ம் தேதி காலை 11 மணி முதல் ஜனவரி 8ம் தேதி மாலை 4.30 மணி வரை ஏலத்தில் பங்கு பெறலாம்.

 இந்த E-Auction முறையில் பங்கு பெற விரும்பும் பொதுமக்கள் அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகளை வரும் 18ம் தேதி முதல் http://transport.py.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்தும், பதிவு இறக்கமும் செய்து கொள்ளலாம். விண்ணப்பத் தொகையின் விவரம், இஎம்டியின் விவரம், ஏல நிபந்தனைகள் குறித்த விவரங்கள் மற்றும் இது சம்பந்தமான இதர விவரங்களை போக்குவரத்துத்துறை அலுவலகத்திலும் தெரிந்து கொள்ளலாம். இந்த ஏலம் சம்பந்தப்பட்ட பணப்பரிவர்த்தனை அனைத்தும் online Payment மூலம் இணையதளம் வாயிலாக மட்டும் பெறப்படும். நேரிலோ மற்றும் காசோலையாகவோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...