×

எலும்பு மூட்டு பிரச்னைக்கு நிவாசா மருத்துவமனையில் நவீன “ஸ்டெம் செல்” சிகிச்சை அறிமுகம்

நாகர்கோவில்,டிச. 17:  உலகம் முழுவதும் ஸ்டெம் செல் மூலம் செய்யப்படும் சிகிச்சைகள் பிரபலமடைந்து வருகின்றன. அவற்றில் மூட்டுகளில் ஏற்படும் குருத்தெலும்பு காயங்கள், இணையாத எலும்பு முறிவுகள் ஆகிய பிரச்னைகளுக்கு இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த சிகிச்சை நாகர்கோவில் தேரேகால்புதூர் நிவாசா மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த சிகிச்சையில் நோயாளியின் இடுப்பு அல்லது மூட்டு பகுதியில் இருந்து ஊசி மூலம் எலும்பு மஜ்ஜை சேகரிக்கப்படுகிறது. அதில் இருந்து “ஸ்டெம் செல்கள்” பிரித்து எடுக்கப்படுகிறது. பின்னர் அது பிரச்னை உள்ள இடத்தில் ஊசி மூலம் செலுத்தப்படுகின்றது. இந்த சிகிச்சை பற்றி டாக்டர் நிவாசன் கூறும்போது,இந்த சிகிச்சைக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. எளிதான ஊசி மூலம் சரி செய்யலாம். இதுபோல தோள்பட்டை வலி, குதிகால் வலி போன்ற வலிகளுக்கு பிஆர்பி என்ற நவீன சிகிச்சை மூலம் சரி செய்யலாம். இந்த சிகிச்சைக்கு வெளிநாட்டு கருவிகள் மற்றும் முறைகள் பயன்படுத்தப்படுவதாகவும் தற்போது தங்கள் மருத்துவமனையில் அவற்றை செயல்படுத்துவதாகவும் தெரிவித்தார்.மேலும் இந்த சிகிச்சைகள் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இதன் மூலம் ஸ்டீராய்டு போன்ற ஊசிகளை தவிர்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags : ிNivasa Hospital ,
× RELATED காங்கிரஸ் வாக்கு எண்ணும் முகவர்கள் ஆலோசனை கூட்டம்