×

உடற்பயிற்சி செய்வோர் அவதி செம்பனார்கோவில் வட்டாரத்தில் காய்ந்து வரும் சம்பா பயிருக்கு தண்ணீர் திறந்து விட கோரிக்கை

தரங்கம்பாடி, டிச.16: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் வட்டாரத்தில் சம்பா பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்வதால் உடனடியாக ஆறுகளில் தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செம்பனார்கோவில் வட்டாரத்தில் ஆற்றுப்பாசனம் மற்றும் பம்பு செட்டுகள் மூலம் 40 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது. அதில் 10ஆயிரம் ஏக்கர் அளவில் பம்புசெட் மூலம் நடவு செய்யப்பட்ட சம்பா சாகுபடி நிலங்களில் இன்னும் சில தினங்களில் அறுவடை நடைபெற உள்ளது. ஆற்று பாசனத்தை பயன்படுத்தி பொறையார், காட்டுச்சேரி, திருக்கடையூர், காளியப்பநல்லூர், பிள்ளைபெருமாநல்லூர், பத்துக்கட்டு, சிங்கானோடை, அனந்தமங்கலம், ஒழுகைமங்கலம், மாணிக்கப்பங்கு, தில்லையாடி, கீழ்மணல்மேடு, திருவிடைக்கழி, ஆக்கூர், காளஹாஸ்திநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளன. பயிர்கள் முளைவிடும் தருணத்தில் தண்ணீர் இல்லாமல் காயும் நிலை ஏற்பட்டுள்ளது. வீரசோழன், மகிமலை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் விடாததால் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் விடமுடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். மேட்டூர் அணை நிரம்புள்ள பொழுதிலும் ஆறுகளில் தண்ணீர் இல்லாமல் சம்பா பயிர்கள் காய்வது விவசாயிகளை கவலை அடைய வைத்துள்ளது. உடனடியாக ஆறுகளில் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Exercisers ,plant ,area ,Samba ,Avi Chempanarko ,
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...