×

நைனாமலையில் விதை பந்துகள் தூவும் பணி

சேந்தமங்கலம், டிச.16:  நைனாமலையில் பசுமைக்காவலர்கள் இயக்கத்தின் சார்பில், தூய்மை மற்றும் விதை பந்துகள் தூவும் பணி நடந்தது.புதன்சந்தை அடுத்துள்ள நைனாமலையில், வனவிலங்குகளின் வாழ்வாதாரம் காக்கவும், இயற்கை சூழலை பேணிக் காத்திடவும், தமிழக பசுமைக் காவலர்கள் இயக்கத்தின் நாமக்கல் கிளையின் சார்பில், 5 ஆயிரம் விதைப்பந்துகள் தூவும் பணி நடைபெற்றது. அடிவாரம் ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து மலைஉச்சியில் உள்ள அருவாள் பாலி வரை விதைப்பந்து தூவும் பணி நடந்தது. இதனை மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகாஜ் தொடங்கி வைத்தார். மலையேறும் நண்பர்கள் குழுவினர் மாதேஸ்வரன், ராமச்சந்திரன், முருகேசன், நாகராஜன் மற்றும் பசுமைக் காவலர் இயக்க குழுவினர் கார்த்திகேயன், காயத்திரி, ஸ்ரீகாந்த், மனோஜ்குமார் மற்றும் வனத்துறையினர், இந்து அறநிலையத்துறையினர் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் விதைத்தூவும் பணியில் பங்கேற்றனர்.


Tags : Seed Balls ,
× RELATED மாவட்டம் முழுவதும் நடவு செய்ய 30 ஆயிரம்...