×

கூளாப்பாடி கிராமத்தில் பாழடைந்து காணப்படும் மண்புழு தயாரிப்பு கூடம்

சேத்தியாத்தோப்பு, டிச. 16: கீரப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூளாப்பாடி கிராமத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மண்புழு தயாரிப்பு கொட்டகை அமைக்கப்பட்டது. ரூ.ஒரு லட்சம் மதிப்பீட்டில் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து அதனை பதப்படுத்தி மண்புழு வளர்க்க 10 சிமென்ட் தொட்டிகளும், கீற்று கொட்டகையும் கட்டப்பட்டது.  ஆனால் கட்டி முடிக்கப்பட்டு, இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் பாழடைந்து காணப்படுகிறது. இதனால் அரசு பணம் வீணாகி வருகிறது. இந்த திட்டமானது மத்திய அரசால் கொண்டு வரப்பட்டதாகும். மேலும் சுயசார்பு குழுவில் இருக்கும் பெண்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
எனவே, மண்புழு தயாரிப்பு கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kulapadi ,village ,
× RELATED இளந்திரைகொண்டான் கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி