×

மேலூர் அரிட்டாபட்டி மலையில் கல்லூரி மாணவர்களுக்கு மலையேறும் பயிற்சி

மேலூர், டிச. 16: மேலூர் அரிட்டாபட்டி மலையில் மலை ஏறும் பயிற்சி, கோயிலை சுத்தம் செய்தல், பண்டைய கலையை கற்றல் என 3 நிகழ்ச்சிகள் கல்லூரி மாணவர்களால் செய்யப்பட்டது.  மதுரை வக்பு வாரிய கல்லூரியில் இருந்து தேசிய மாணவர் படை வீரர்கள் மேலூர் அருகில் உள்ள அரிட்டாபட்டி மலையில் மலையேறும் பயிற்சியில் நேற்று ஈடுபட்டனர். இதனை தமிழ்நாடு பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர் கர்னல் முகுல் மன்கு மற்றும் மேஜர் சையது இப்ராஹிம் துவக்கி வைத்தனர்.

   மலையேற்ற பயிற்சியுடன் கல்லூரி மாணவர்கள் அப்பகுதியில் உள்ள குடவறை கோயிலை சுத்தம் செய்வது, பண்டைய கலைகள் குறித்து கற்றுக்கொள்வது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஹவில்தார் சந்திரசேகர் கலந்து கொண்டார். நிகழ்ச்சிகளை அரிட்டாபட்டி கிராமத்தின் சார்பாக ஏழுமலை பாதுகாப்பு சங்க செயலாளர் ரவிச்சந்திரன் ஒருங்கிணைத்தார்.

Tags : college students ,Aritapatti mountain ,
× RELATED கல்குவாரியில் செல்பி எடுத்தப்போது...