×

வேலை வாங்கி தருவதாக கூறி நூதன முறையில் நகை அபேஸ் : ஆட்டோ டிரைவர் கைது

சென்னை: தண்டையார்பேட்டை கீரைத் தோட்டம், லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவி (50), பெயின்டர். இவர் நேற்று முன்தினம் வேலை தேடி, அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், நுங்கம்பாக்கத்தில் பெயின்டிங் வேலை இருப்பதாக கூறி அவரை அழைத்துச் சென்றார். நுங்கம்பாக்கத்தில் ஒரு வீட்டை காண்பித்த ஆட்டோ டிரைவர், அங்கே சென்று வேலை குறித்து விசாரிக்கும்படி கூறியுள்ளார். மேலும், நகை அணிந்து சென்றால் வேலைக்கு அதிக பணம் தர மாட்டார்கள். எனவே, நீங்கள் அணிந்துள்ள செயினை என்னிடம் கழற்றிக் கொடுத்து விட்டு செல்லுங்கள். வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

இதை நம்பிய ரவி, தனது ஒன்றரை பவுன் செயினை கழற்றி கொடுத்து விட்டு, அந்த வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இருந்தவர்கள், வேலை எதுவும் இல்லையே என்று கூறியுள்ளார். இதனால், திரும்பி வந்து பார்த்தபோது அங்கு ஆட்டோ டிரைவர், நகையுடன் மாயமானது தெரிந்தது.
அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை பெற்று விசாரித்தபோது, திருநின்றவூர், கரிகாலன் தெரு, முத்தமிழ் நகரை சேர்ந்த மகேஷ் (எ) மகேந்திரன் (62) நகையை அபஸே் செய்தது தெரிந்தது. அவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில், இவர் தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்ைட, ராயபுரம், சென்ட்ரல் போன்ற பகுதிகளில் வீட்டு வேலை, கொத்தனார் வேலைக்காக காத்திருக்கும் நபர்களை இப்படி அழைத்து சென்று நகை, பணத்தை அபேஸ் செய்தது தெரிந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...