×

கேரள மருத்துவக்கழிவுகளைகொட்டினால் நடவடிக்கை தேனி சுகாதாரத்துறை எச்சரிக்கை

தேனி, டிச. 13: கேரளாவில் இருந்து வந்து மருத்துவக் கழிவுகளை யாராவது தேனி மாவட்டத்தில் கொட்டினால் அவர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. தேனி மாவட்டம் முழுவதும் செப்டிக் டேங்க் கழிவுகளை தற்போது தனியார் லாரிகள் மூலம் எடுத்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடங்களில் கொட்டி வருகின்றனர். இந்த கழிவுகளால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உருவாகிறது. தவிர துர்நாற்றமும் ஏற்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் இந்த செப்டிக் டேங்க் கழிவுகள் மழைநீருடன் கலந்து ஆற்று நீரில் கலக்கிறது. இதனைத் தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு படி, சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் செப்டிக் டேங்க் சுத்திகரிப்பு லாரி உரிமையாளர்களை அழைத்து கூட்டம் நடத்தினர். இ்ந்த கூட்டத்தில் செப்டிக் டேங்க் கழிவுகளை எந்த உள்ளாட்சியில் எங்கு கொட்ட வேண்டும் என இடம் ஒதுக்கி கொடுத்துள்ளனர். அந்த இடம் தவிர்த்து மற்ற இடங்களில் கொட்டினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். கேரளாவில் இருந்து வந்து மருத்துவக் கழிவுகளை யாராவது தேனி மாவட்டத்தில் கொட்டினால் அவர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Theni Health Department ,
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது