கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

உசிலம்பட்டி, டிச.13: உசிலம்பட்டி அருகே கிணற்றுக்குள் விழுந்த பசுமாடு பத்திரமாக மீட்கப்பட்டது. உசிலம்பட்டியை அடுத்து கருமாத்தூர் கல்லூரி அருகே பால்சாமி என்பவர் தோட்டம் உள்ளது. இங்குள்ள கிணறு அருகே இதே ஊரை சேர்ந்த பாண்டி என்பவரது பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டது. இது குறித்து உசிலம்பட்டி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் சுப்புராஜ் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பெரும் போராட்டத்திற்கு பிறகு பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories:

>