×

2581 பேர் வேட்புமனு தாக்கல்

திருவள்ளூர், டிச. 13: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் களை கட்டியது. நேற்று மட்டும் 945 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதுவரை 4 நாட்களில் மொத்தம் 2,581 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களுக்கான உள்ளாட்சி தேர்தல், இரண்டு கட்டங்களாக வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் துவங்கி முதல் இரு நாட்கள் ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடியே காணப்பட்டன.

பிரதானக் கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலை இதுவரை வெளியிடவில்லை. வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யும் நாளையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், மனுதாக்கல் முதல் நாளான 9ம் தேதி, மொத்தமுள்ள 4,725 பதவிகளுக்கு, 179 பேர் மனுதாக்கல் செய்தனர். 2ம் நாளான 10ம் தேதி 123 பேர் மனுதாக்கல் செய்தனர். மூன்றாவது நாளான நேற்று முன்தினம் பவுர்ணமி என்பதால், 1,134 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், 4ம் நாளான நேற்று 945 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். மாவட்டத்தில் 4 நாட்களில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 5 பேர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 59 பேர், ஊராட்சி தலைவர் பதவிக்கு 556 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,961 பேர் என மொத்தம் 2,581 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

Tags :
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல்...