×

ஜெயங்கொண்டம் அருகே பரபரப்பு அதிக விலைக்கு விற்பனை செய்ய வெங்காய மூட்டைகள் பதுக்கல்

ஜெயங்கொண்டம்,டிச.13: ஜெயங்கொண்டம் அருகே அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த வெங்காய மூட்டைகள் அழுகியதால், ஓடையில் வீசப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் தமிழகமெங்கும் தற்பொழுது வெங்காயம் பற்றாக்குறையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. மழையின் காரணத்தால் வெங்காயம் விளைச்சல் இல்லை. அதனால் தமிழகம் முழுவதும் வெங்காயம் இல்லாமல் எகிப்து நாடு துருக்கியில் இருந்து வெங்காயத்தை இந்தியா இறக்குமதி செய்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் பல இடங்களில் வெங்காயத்தின் விலை கடும் விலை உயர்வில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கிலோ விலை சுமார் ரூ140 ஐ தொட்டது. இதனால் பொதுமக்கள் சமையலில் வெங்காயத்தை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுறம் அடுத்த கருவாட்டு ஓடையில் சுமார் பத்து மூட்டை அளவில் பல்லாரி வெங்காயம் மூட்டை மூட்டைகளாக தூக்கி வீசப்பட்டு உள்ளன. வாகனத்தில் செல்லும்போது அழுகிய வெங்காயத்தின் துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் பொதுமக்கள் பலரும் முகம் சுளித்து செல்கின்றனர். இந்த மூட்டைகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மொத்த வெங்காய விற்பனையாளர்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்தார்களா. வெங்காயம் அழுகியதால் கொண்டு வந்து வீசி உள்ளார்களா என பொதுமக்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெங்காயத்தினை இப்படி ஓடையில் வீசப்பட்டுள்ளது. குறைவான விலைக்கு முன்பே கொடுத்திருக்கலாமே என ஏழை பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இதனை அழுகிய நிலையில் ஓடையில் வீசப்பட்ட உள்ளதால் துர்நாற்றமும் வீசி வருகிறது. அப்படி வீசுபவர்கள் குழிதோண்டி இதனை புதைத்து இருக்கலாம். இப்படி ஓடையில் வீசப்பட்ட அழுகிய வெங்காயத்தால் ஜெயங்கொண்டம் பகுதியில் பரபரப்பாக உள்ளது.



Tags : Jayankonda ,
× RELATED ஜெயங்கொண்டத்தில் நவம்பர் புரட்சி தின பொதுக்கூட்டம்