×

அழுகியதால் ஓடையில் வீச்சு ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்

பாடாலூர், டிச.13: ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேட்பு மனுத்தாக்கலின் 4-ம் நாளான நேற்று ஒரே நாளில் ஊராட்சி தலைவர் பதவிக்கு 9 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 41 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கு வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. அதன்படி ஆலத்தூர் ஊராட்சி
ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 18 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 39 ஊராட்சி தலைவர், 300 ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 359 பதவிகளுக்கு வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக 174 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த தேர்தலுக்காக 51 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆலத்தூர் ஒன்றிய பகுதியில் 89,406 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
வேட்புமனு தாக்கலின் முதல் நாள் புஜங்கராயநல்லூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 18 பேரும் என 20 பேரும், 2-ம் நாள் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 7 பேரும், 3-ம் நாள் ஊராட்சி தலைவர் பதவிக்கு 11 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 31 பேரும் என 42 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 4-ம் நாளான நேற்று ஊராட்சி தலைவர் பதவிக்கு 9 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 41 பேரும் என 50 பேர் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். கடந்த 4 நாள்களாக ஊராட்சி தலைவர் பதவிக்கு 22 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 97 பேரும் என மொத்தம் 119 பேர் வேட்புமனு தாக்கல்
செய்துள்ளனர்.

Tags : stream ,Alathur ,town ,
× RELATED திருப்போரூர் அருகே 50 டன் கட்டைகள் தீயில் எரிந்து நாசம்