×

பெரம்பலூர் அடுத்த எறையூரில் அரசு சார்பில் அமைத்த ஜிம்மை அடித்து நொறுக்கிய சமூக விரோதிகள்

பெரம்பலூர், டிச.13:எறையூரில் கட்டும ஸ்தான தேகத்தைப்பெற சார்பில் சார்பில் அமைக்கப்பட்ட ஜிம்மை பயன்படுத்த ஆட்கள் யாரும் வராததால் சமூக விரோதிகள் அடித்து நொருக்கினர். பெரம்பலூர் மாவட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பாக, கட ந்த 2018ம் ஆண்டு தாய் திட் டத்தின் கீழ் இருபாலருக் குமான நவீன உடற்பயிற் சிக் கூடங்கள் 5 இடங்க ளில் பூங்காவுடன் அமைக்க ஏற்பாடு செய்யப் பட்டது.பெரம்பலூர் ஒன்றியம் எள ம்பலூர் ஊராட்சிக்கு உட்ப ட்ட 4ரோடு அருகே மின்ந கர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் எறையூர், வேப்பூர் ஒன்றியத்தில் வேப்பூர், ஆ லத்தூர் ஒன்றியத்தில் செட்டிக்குளம், சாத்தனூர் ஆகி ய 5 இடங்களில் நவீன உட ற்பயிற்சிக் கூடமும், குழந்தைகளுக்கான பூங்காவும் அமைக்கத் திட்டமிடப்பட்டு, அதன் படி, ரூ10லட்சத்தில் நவீன உள்ளரங்க உடற்பயி ற்சிக் கூடம், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், ரூ.20 லட்சத்தில் குழந்தைகள் விளையாடும் பூங்கா என 5 இடங்களிலும் அமைக்கப் பட்டது.

ஆண்களுக்கும், பெண்க ளுக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு, பயிற்சிக்கு அனுமதிக்கப்படும் என அப்போது அதிகாரப் பூர்வமாகத் தெரிவிக்கப் பட்டது. அனுமதி இலவச மென்றாலும் சில நாட்களுக்குப்பிறகு பராமரிப் பதற்காக மிகமிகக் குறை ந்த கட்டணம் வசூலிக்கவும் முடிவு செய்திருந்தனர். 5 உடற்பயிற்சிக் கூடங்களில் முதலில் பணிகள் முடிந்த மின்நகர் உடற்பயிற்சிக் கூடம், 2018 செப்டம்பர் 19ம் தேதி பெரம்பலூருக்கு கவர்னர் வருகை தந்ததால் 15ம் தேதியே பயன்பாட்டிற்கு வந்தது.கவர்னர் பன்வாரி லால் புரோஹித்தும் நேரில் சென்று மின்நகர் ஜிம்மை பார்வையிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக சில வாரங்க ளில் எறையூர் ஜிம்மும் பயன் பாட்டிற்கு வந்தது.ஆனால் அதனை முறை யாக ஒன்றிய நிர்வாகம் பராமரிக்காததால், பயன்படுத்த அதிகப்படியானோர் ஆர்வம் காட்டாததால் தினமும் வெறிச்சோடிக் கிடந்தன. இதனையே சாக்காக பயன்படுத்திக்கொண்ட சமூகவிரோதிகள், என்ன டா பராமரிக்கவும் ஆளில் லை, பயிற்சி பெறவும் ஆளி ல்லை, எதுக்குடா சும்மா கிடக்கிறது என்ற ஆதங்கத்தில் உடற்பயிற்சிக் கருவி களை உருக்குலைந்து போ கும்படி அடித்து நொறுக்கி விட்டுச் சென்றுள்ளனர். செட்டிக்குளம் ஜிம்மும் பயன் பாடின்றிக் கிடக்கும் நிலையில் அரசுப் பணத் தை எப்படியெல்லாம் வீண டிக்கிறார்கள் என்ற ஆத்திர மே பொதுமக்களுக்கு ஏற் பட்டுள்ளது. இதனைப் பார்த்துஒன்றிய அலுவலக அதி காரிகள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.

Tags : gymnasts ,Perambalur ,gym ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...