×

பாரதியார் பிறந்தநாள் மாங்கொட்டை சித்தர்சுவாமி பீடத்தில் சிறப்பு வழிபாடு

நாகை, டிச.13: பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஞானகுருவான மாங்கொட்டை சித்தர் சுவாமி பீடத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது.நாகை மருந்துக்கொத்தள தெருவில் குள்ளச்சாமி என்கிற மாங்கொட்டை சித்தர் சுவாமி பீடம் உள்ளது. பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் அவருக்கு ஞானகுருவாக விளங்கியவர் மாங்கொட்டை சித்தர். இவர் குறித்து பாரதியார் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு மருந்துக்கொத்தள தெருவில் உள்ள மாங்கொட்டை சித்தர் சுவாமி பீடத்தில் நேற்று முன்தினம் இரவு பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது. சித்தர் பீடத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையடுத்து மகா தீபாராதணை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Siddharswamy Faculty ,
× RELATED பெற்றோர் கோரிக்கை கொள்ளிடம் அருகே...