×

உடுமலை கிளை நூலகத்தில் பாரதியார் பிறந்த தின விழா

உடுமலை,டிச.13:உடுமலை உழவர்சந்தை எதிரே உள்ள கிளை நூலகத்தில், மகாகவி பாரதியார் பிறந்த தின விழா வாசகர்வட்டம் சார்பில் கொண்டாடப்பட்டது. நூலகர் கணேசன் வரவேற்றார். வாசகர் வட்ட துணைத்தலைவர் வி.கே.சிவக்குமார் தலைமை வகித்தார். நூலகர் அருள்மொழி, வாசகர் வட்ட உறுப்பினர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலக வாசகர் வட்ட ஆலோசகர் அய்யப்பன் பாரதியார் படத்துக்கு மாலை அணிவித்தார். மாணவர்கள் பாரதியார் பாடல்களை பாடினர். முன்னதாக நடந்த ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன. நிறைவாக நூலகர் மகேந்திரன் நன்றி கூறினார்.

Tags : Bharathiar ,Birthday ,Udumalai Branch Library ,
× RELATED அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி