×

காவலன் செயலி குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

பொள்ளாச்சி, டிச. 13:  பொள்ளாச்சி பாலக்காடுரோட்டில் உள்ள என்ஜிஎம் கல்லூரியில், மேற்கு போலீஸ் ஸ்டேஷன் சார்பில், மாணவிகளுக்கு காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் பழனிசாமி தலைமை தாங்கினார். என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் சிவன்அருள்செல்வி முன்னிலை வகித்தார். இதில், எஸ்ஐ.,சின்னகாமனன் பேசுகையில், ‘இப்போதைய கால கட்டத்தில், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு முக்கியமானதாக உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், தங்களுக்கு தற்காப்பு இல்லாமல் ஏதேனும் இக்கட்டான  சூல்நிலையில் இருந்தால், தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள காவலன் செயலியை தொட்டாலே போதும்.

அடுத்து சில நிமிடங்களில், அப்பகுதி ஸ்டேஷன் போலீசார் விரைந்து வந்து உதவுவர். இதற்காக, பெண்கள் தங்கள் கையில் உள்ள செல்போனில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அது உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். கல்லூரி மாணவிகள், முன்பின் தெரியாதவர்களிடம்  பேச்சுகொடுப்பதை தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும்போது எங்கு செல்கிறோம் என பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

Tags : college students ,
× RELATED ஒரே பைக்கில் சென்றபோது அடையாளம்...