×

கலாசார போட்டியில் கேம்பிரிட்ஜ் பள்ளி சாதனை

கடையம், டிச. 13: கடையம் அருகே கீழாம்பூர் கேம்பிரிட்ஜ் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் கலாசார போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தனர். சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் குழுமம் மற்றும் கடையம் ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து  கலாசார விளையாட்டுப் போட்டிகள், கடையம் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 15க்கும் மேற்பட்ட பள்ளியின் மாணவர்களுடன் போட்டியிட்ட கேம்பிரிட்ஜ் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் தனித்தனியாக பதக்கங்களை வென்றதுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி நிர்வாகி ராபர்ட், சிபிஎஸ்இ பள்ளித் தாளாளர் ஆனி மெட்டில்டா, முதல்வர் அமலா ஜூலியன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.

Tags :
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி