×

வி.வி.டி. பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடி, டிச. 13: தூத்துக்குடி ஆரோக்கியபுரம் வி.வி.டி நினைவு   மேல்நிலைப்பள்ளியில் மன அழுத்தம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட   கல்வி அலுவலர் வசந்தா ஆலோசனையின் பேரில் நடந்த இம்முகாமில், பிரபல மனநல மருத்துவர் சிவசைலம் பங்கேற்று பல்வேறு பயிற்சிகள் அளித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘சில நேரங்களில்   மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் வெளியே தெரிவதில்லை. அவர்கள் தாமாக   முன்வந்து தமக்கு ஏற்பட்டுள்ள மனச்சோர்வு மற்றும் குறைகளை ஆரம்ப நிலையிலேயே   பெற்றோர்கள் அல்லது நண்பர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும்.
குறையை ஆரம்ப   நிலையில் கூறி விட்டால் மன அழுத்தங்கள் நீங்கிவிடும்’’ என்றார். இதையடுத்து மாணவர்களுக்கு ஆளுமைத்திறன் மேம்பாடு, சமூகத்திறன்   வளர்ப்பு, சுயஒழுக்கம் பேணுதல், சகிப்புத்தன்மை அதிகரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.  உதவித் தலைமை ஆசிரியை சீதா நன்றி கூறினார்.

Tags : Viviti Awareness Camp ,School ,
× RELATED பள்ளி வளாகத்திற்குள் உலா வந்த காட்டுயானை