×

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதற்றம் நிறைந்த 378 பூத்களில் வெப் கேமரா

ஓட்டப்பிடாரம், டிச. 13:  ஓட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக நேற்று நடந்த வேட்பு மனுத்தாக்கலை பார்வையிட்டு ஆய்வுசெய்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் முதற்கட்டமாக டிச. 27ம் தேதி 7  ஒன்றியங்களுக்கும், 2வது கட்டமாக 30ம் தேதி 5 ஒன்றியங்களுக்கும் உள்ளாட்சி தேர்தல்  நடக்கிறது. இதில் பணியாற்ற  மொத்தம் 14,500 பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். இவர்களுக்கு டிச. 15, 21 ஆகிய தேதிகளில் பயிற்சி வகுப்பு நடக்கிறது. தேர்தலுக்கு ஒருநாள் முன்னதாக 3வது கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும்.
அன்றைய நாளில்  தேர்தலுக்குரிய பொருட்கள் வழங்கப்பட்டு வாக்குச்சாவடி பணியிடம்  குறித்தும்  தெரிவிக்கப்படும். வாக்குப்பெட்டிகள் மற்றும் தேர்தலுக்கான பொருட்கள் என  அனைத்து தயார் நிலையில் உள்ளன.

மண்டல தேர்தல் அலுவலர்கள்  நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு மண்டல தேர்தல் அலுவலருக்கு 15ல் இருந்து  20 வாக்குச்சாவடிகள் வரை அவரது கட்டுபாட்டில் வரும். அவர்களுக்கான  பயிற்சியும் இந்த வாரம் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் பதற்றம் நிறைந்தவை கண்டறியப்பட்டுள்ள 378 பூத்களில் வாக்குப்பதிவை கண்காணிக்க வெப் கேமரா அல்லது சிசிடிவி கேமா பொருத்தப்படும். தேவைப்பட்டால் வாக்குப்பதிவு முழுவதையும் வீடியோ எடுக்கவோ அல்லது நுண்  பார்வையாளர் நியமிக்கவோ நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். ஆய்வின்போது தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமார், ஓட்டப்பிடாரம் ஆணையாளர் ஹெலன் பொன்மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : elections ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...