×

சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பணிகளில் தொய்வு

சேத்தியாத்தோப்பு, டிச. 13: சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில், ஊழியர்கள் பற்றாக்குறையால் சான்றிதழ்கள் வழங்குவது, தேர்தல் சம்பந்தப்பட்ட பணி உள்ளிட்டவைகளில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு அவதியடைந்து வருகின்றனர். சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. பேரூராட்சிக்கு உட்பட்ட மொத்த மக்கள் தொகை பத்தாயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், நகரில் பல வார்டுகளில் சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி வடிகால் முறைப்படுத்தப்படாமலும், வடிகால் நீர்வழி பாதைகள், பேரூராட்சிக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு, வாக்காளர் பட்டியலில் குளறுபடி, வார்டு மறுவரையறை, புதிய பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் சென்று திரும்பாதது, பேருந்து நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டு வருவது, மேலும் புதிய கட்டிடங்களுக்கு அப்ரூவல் வழங்குவது உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தற்போது சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் இருவர் மற்றும் செயல் அலுவலர் என மூவரை கொண்டு இயங்குவதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள செயல் அலுவலர், அலுவலகம் சம்பந்தப்பட்ட கூட்டம் என அடிக்கடி சென்றுவிடுவதால், பொதுமக்கள் சான்றிதழ் வாங்க முடியாமல் அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையில் அனைத்து வார்டுகளிலும் தெருவிளக்குகள் எரிவதில்லை என்றும், அதனை சரிசெய்ய ஊழியர்கள் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். தற்போது அனைத்து பணிகளையும் குடிநீர் இயக்கும் பணியாளர்களே கவனித்து வருகின்றனர். எனவே, பேரூராட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும், அலைக்கழிக்க விடாமல் சான்றிதழ்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும், பேருந்து நிலைய வணிக வளாக கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Cheyyattoppu ,barracks ,
× RELATED 2 கட்டுமான நிறுவன அதிபர்களுக்கு சொந்தமான 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை