×

தக்கலையில் குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்த 18 குரங்குகள் சிக்கின

தக்கலை, டிச.13:  தக்கலையில் குடியிருப்பு பகுதியில் புகுந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்த குரங்குகளை வனத்துறை பிடித்து சென்றனர்.
பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட தக்கலை பேலஸ் ரோடு, மார்க்கெட் ரோடு, தர்ஹா ரோடு, டானா முடுக்கு பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. இந்த குரங்குகள் வீடுகளில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றதுடன், கூரைகளில் ஓடுகளை சேதப்படுத்தின. மேலும் தென்னை மரத்தில் இருந்து தேங்காய்களை பறித்ததுடன் வீட்டுத் தோட்டங்களை நாசம் ெசய்தன. குரங்குகள் தொல்லை அதிகரித்ததால் பெண்கள், குழந்தைகள் அச்சம் அடைந்தனர்.

இது தொடர்பாக மாவட்ட வனத்துறைக்கு புகார் அளித்தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ஆனந்த் உத்தரவின் பேரில் குரங்குகளை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டன. கடந்த ஒரு மாதத்துக்கு முன் 17 குரங்குகள் பிடிபட்டன. இதனை வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் 18 குரங்ககள் பிடிபட்டன. இவற்றை வனத்துறை ஊழியர் துரைராஜ், வேட்டைத்தடுப்பு காவலர் ஜெகன் ஆகியோர் பாதுகாப்பான வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.

Tags : area ,
× RELATED வாட்டி வதைக்கும்...